கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ் நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்புரிமையில் இருந்தும், பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையச் செயற்படத் தவறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கான கடிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்