
மட்டு.வின்சென்ட் பாடசாலை பரிசளிப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பாடசாலை குறொவ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ,கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும்,கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மார்க்கண்டு திருக்குமார் சிறப்பு அதிதியாகவும்,மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.ஹரிகரராஜ்,திருமதி என்.மஹேந்திரகுமார் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரணதரம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்) ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவிகள் அதிதிகளால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தந்த மாணவர்களும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இடம்பெற்ற கலைநிகழ்வுகள் அனைவரதும் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்





