வைத்தியர் பரிசோதித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நோயாளி
வைத்தியர் பரிசோதித்துக்கொண்டிருக்கும் போதே நோயாளி ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தியா – மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார், அப்போது வைத்தியர் அவருக்குப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார், எனினும் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே குறித்த நபர் திடீரென சரிந்து விழுந்தார்.
உடனே, வைத்தியர் அந்த நபரை தொடர்ந்து பரிசோதனை செய்ததுடன், அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.
இதையடுத்து, அந்த நபருக்குப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்