அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டி

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260பேர் கலந்துகொண்டனர்.

குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர் மற்றும் 5கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.

5கிலோமீற்றர் போட்டியில் சிறுவர்கள், முதியவர்கள் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் களன அமுனுபுர, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் மற்றும் பெடிவே உல்லாச விடுதியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பீ.சப்றாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்