மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம்

மட்டக்களப்பு, வாகரை, புதூர் கதிரவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில், ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 11 ஏக்கர் காணி அபிவிருத்தி பணிகளுக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஹான் சாலிய  தனது மனைவியுடன் நேற்று ஜீப்பில் வந்தபோது வாகரை பிரதேச செயலாளர் தமக்கு பயிர்ச்செய்கை அனுமதிப்பத்திரத்தில் காணிகளை வழங்கியுள்ளதாகவும் வீதி திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறும் கூறி அவ்விடத்திற்கு வந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் அங்கு வந்த மக்கள் பேக்ஹோ ஓட்டுநரை தாக்கி, பேக்ஹோவின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

இதனையடுத்து பேக்ஹோ ஓட்டுநரை தாக்காமல் இருக்க குறித்த நபர் துப்பாக்கியை தரையில் பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஹான் சாலிய அபேசிங்க வாகரை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ஏ.பி 40739 என்ற உரிமம் கொண்ட கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் பொதியுறை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்