வாகரை விபத்தில் 8 வயது சிறுவன் பலி

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஓட்டமாவடி – மீராவோடை எல்லை குறுக்கு வீதியைச் சேர்ந்த மஹ்தி (வயது-8) என்பரே உயிரிழந்துள்ளார்.

தாயுடன் ஆட்டோவில் சென்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆட்டோ வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேனில் சிறுவன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு வேன் சாரதி வேனை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்தை விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்