
150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
