மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனே உள்ளனர்

கொள்கை அடிப்படையிலான அரசியலே நாட்டுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை – மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஆட்சிக்கு வந்ததும், கலாசார சீரழிவுகள் ஏற்படும் என சிலர் கூறுகின்றனர்.

எனினும் நாட்டின் ஆட்சியாளர்களே கலாசாரத்தை சீர்குலைத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அதனை நிரூபிக்கத் தவறுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எந்தவொருவருடனும் சிறு சிறு குழுக்கள் இணைந்தாலும், மக்கள் அவர்களுடன் இணைவதில்லை.

மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனே உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்