
வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் ஊழியருக்கும் தகராறு : ஒருவர் கொலை!
வெள்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையத்தில் உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றிவந்த ஊழியர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 46 வயதுடைய நபரே பலியானார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
