
ஸ்ரீ மஹா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அவர், தேரர்களிடம் ஆசிபெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


