நிலவும் மழையுடனான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து களுகங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கங்கைகளை அண்டியுள்ள தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்