
திருகோணமலை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது, இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார், என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது, இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது
இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதோடு, ஆசிரியர் வெற்றிடங்கள் 500, திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது, இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப் போடப்படுகின்றன
1976 ன் பின்கட்டுகுளப் பகுதிக்கு முதல் பாராளுமன்ற பிரதிநிதி நானே, புல்மோடுடை திரியாய் குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன், இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் .
பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெற்போலியன் கூறியது போன்று “பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது, எனக் கூறினார்.
குறித்த சந்திப்பில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
