தீவிரமடையும் ஆம்பில் புயல் : 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் டோக்கியோவை பாதித்துள்ள ஆம்பில் புயலின் பாதிப்பினால் இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின் படி ஆம்பில் சூறாவளி சிபா மாகாணத்தில் உள்ள சோஷி நகருக்கு தெற்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் மாலை 4 மணிக்கு டோக்கியோவுக்கு அருகில் காண்டோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது என்று பொது ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது.

தற்போது பசிபிக் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் டோக்கியோ பிராந்தியத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “கடுமையான காற்று” “பறக்கும் கழிவுப் பொருட்களால் காயங்களை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொய்கோவின் வடக்கே உள்ள ஃபுகுஷிமா மாகாணத்தில் உள்ள இவாக்கி நகரம், சுமார் 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்