வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு , மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, தீவை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல பாதிப்பு காரணமாக இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்