வாகன விபத்து: பெண் உயிரிழப்பு
இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி பாலத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லொறியின் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார்.
ராஜன் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது அதிகாலை நேரத்தில் சாரதியின் தூக்கக் கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் பின்சீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குறித்த பெண்ணின் கணவரும், சாரதியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், முன்சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் காரின் முன்பகுதி நசுங்கிய நிலையில், கார் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக லொறியின் சாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
