தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயம்
இந்தியாவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் கை, கால்கள் போன்ற இடங்களில் கடித்ததில் காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரணாம்பட்டு ஆர்.ஐ. சரவணன், கிராம நிர்வாக அலுவலர் துரை முருகன் ஆகியோர் சிகிச்சை பெற்றவர்களிடம் நலம் விசாரித்தனர்.
மேலும் உடனடியாக தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
