தாய்வானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!

தாய்வான் நாட்டின் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நில அதிர்வு 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இந்த நில அதிர்வு தாய்வானில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான இரண்டாவது சக்தி வாய்ந்த நில அதிர்வு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்