
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீன் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் உயர்பீடம் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
