
1,700 சம்பளம்: தமிழில் வர்த்தமானி வெளியாகவில்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. தமிழ் மொழியிலான வர்த்தமானி அரசாங்க அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இன்று புதன்கிழமை காலை 9.45 மணி வரையிலும் தரவேற்றப்படவில்லை.
வௌியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஓரளவுக்குதான் பரீட்சியம் உள்ளது. தமிழ் மொழியில் இருக்குமாயின் அதனை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும் என்பதே தொழிலாளர்களின் கருத்தாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
