அழகியாக மகுடம் சூடினார் மாற்றுத்திறனாளி பெண்!

தென்னாபிரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில் அந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல இளம்பெண்கள் கலந்துகொண்டனர், அழகிப்போட்டியில் பல்வேறு கட்ட தகுதிச்சுற்றுகள் நடைபெற்றன.

போட்டியின் இறுதியில் 28 வயதான மியா லு ரூக்ஸ் என்ற மாற்றுத்திறனாளி பெண் 2024ஆம் ஆண்டுக்கான அழகி என்ற பட்டத்தைச் சுவீகரித்தார்.

இவர் செவிப் புலனற்ற மாற்றுத்திறனாளி பெண் ஆவார்.

அவர் தனது ஒரு வயதிலே செவிப் புலனை இழந்ததாகவும், பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்’ என்ற சிகிச்சையால் ஒலிகளை உணர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக செவிப்புலனற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஏனைய மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்க விரும்புகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்