முஸ்லிம் சமூகத்துக்கு நியமனம் வழங்கப்படாது என ஒரு இடத்திலும் கல்வி அமைச்சு சொல்லவில்லை!

கல்வி அமைச்சின் ஊடாக பெரும் தோட்ட பாடசாலைக்கு ஆசிரியர் உதவியாளர்கள் 2665 பேரை நியமனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாம் மேற்கொண்டு இருந்தோம்.

அந்த வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி போட்டி பரீட்சை நடத்துவதற்கும் நாம் தீர்மானித்து இருந்தோம். ஆனால் சடுதியாக ஒரு சாரார் உச்ச நீதிமன்றத்துக்கு போய் இந்த நியமனங்களுக்கு எதிராக தடை உத்தரவை பெற்று இருக்கின்றனர்.

இந்த விடயம் நீதிமன்றத்துக்கு போய் இருப்பதன் காரணத்தினால் இதை பற்றி எதுவும் சொல்ல முடியாத நிலைமை எனக்கு ஏற்பட்டு இருக்க்கின்றது, என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பதுளையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு பதில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு விடயத்தை இந்த இடத்தில் தான் கூற விரும்புகின்றேன். நாங்கள் 2665 பேரிடமும் விண்ணப்பங்களை கோரும் போது எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் எந்த ஒரு சமூகத்தை பற்றியும் நாம் பிரசுரிக்கவில்லை. எந்த ஒரு சமூகமும் ஓரங்கட்டும் அளவுக்கு எந்த இடத்திலும் நிபந்தனைகள் உள்ளடக்க படவில்லை.

எனவே இவ்வாறு நீதிமன்றம் போய் இருப்பவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாரபட்சமோ அல்லது ஒரு அநீதி இழைக்கப்படும் என்ற தோரணையில் போய் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.

நாம் எவரையும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று முஸ்லிம் சமூகத்தை நாம் சொல்லவில்லை முஸ்லிம் சமூகத்துக்கு இந்த நியமனம் வழங்கப்படாது என ஒரு இடத்திலும் கல்வி அமைச்சு சொல்லவில்லை அனைவரையும் அதாவது தமிழ் மொழி மூலம் முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகம் இந்த இரண்டு சமூகத்திற்கு ஒரு பொதுவான நியமனங்களை வழங்குவதற்கே இருந்தோம்.

ஆனால் அவ்வாறான நிலையில் இவ்வாறு எதற்காக நீதிமன்றம் போய் இருப்பார்கள் என்று எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் என்னை வந்து சந்தித்த முஸ்லிம் விண்ணப்பதாரிகள் பலத்த எதிர்பை தெரிவித்தனர்.

காரணம் நாங்கள் இவ்வாறு ஒரு பெரும் எதிர்பார்ப்போடு விண்ணப்பித்ததாகவும் அதற்கு எதிராக இப்போது நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்களது துயரத்தை அவர்கள் கூறிவிட்டு சென்றதாகவும் வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்று நாங்கள் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்