அஞ்சல் மூல வாக்களிப்பு: வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்களின் விநியோகம் மற்றும் அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்குதல் என்பன எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்