வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

🔻வெள்ளி உலோகத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனால்தான் நமது முன்னோர்கள் பலரும் வெள்ளித்தட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் வெள்ளிதட்டில்தான் சாதம் ஊட்டுவார்கள்.

🔻அதற்கு காரணம் வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளைப் பெறலாம். குறிப்பாக, வெள்ளித் தட்டில் உணவை வைத்து குழந்தைகளுக்கு ஊட்டினால் அது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், வெள்ளி கரண்டி கொண்டு சாப்பிட்டால் அது உணவை சத்தாக மாற்றுவதோடு பலவிதமான நோய்களையும் தடுக்கிறது. நாம் வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். அது என்னென்ன நன்மைகள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

🔷வெள்ளி பாத்திரத்தில் சாப்பிட்டால் ஆயும் நீடிக்கும் என்று கூறுவதுண்டு. குழந்தைகளுக்கு வெள்ளி தட்டில் உணவு ஊட்டுவதை நம் அதிகம் பாத்திருப்போம். இப்படி சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

🔷வெள்ளியில் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை தட்டின் மேற்பரப்பில் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகின்றன, இது உணவில் பரவும் நோய் அபாயத்தையும் குறைக்கும். அதனால் உணவை வெள்ளி தட்டில் சாப்புடுவது நல்லது.

🔷வெள்ளி பாத்திரத்தில் உணவு சாப்பிடுவோருக்கு எவ்வித ஆபத்தான நோய்களும் ஏற்படாமல் தடுக்கப்படும். அதே போல் நம் உடலில் ஏற்படும் காயங்கள் கூட விரைவில் ஆறத் தொடங்கும். மற்ற பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் வெள்ளி பாத்திரம் நச்சுத்தன்மை இல்லாத பாதுகாப்பான பாத்திரம் என்று கூறப்படுகிறது.

🔷மற்ற சில உலோகங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளி அமிலம் அல்லது கார உணவுகளுடன் வினைபுரியும் வாய்ப்பு குறைவு. இது உணவின் சுவை மற்றும் தரத்தை பாதுகாக்க உதவுகிறது.

🔷வெள்ளியில் இருக்கும் வேதியியல் பொருட்கள் உணவை கெட விடாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. பிளாஸ்டிக் பாத்திரங்கள் தீங்கு தரக்கூடிய துகள்களை விரைவில் வெளிப்படுத்தும். ஆனால், வெள்ளிப் பாத்திரங்கள் எளிதில் துரு பிடிக்காது. அதனால் நமது உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய நச்சுப் பொருட்களை உருவாக்காது.

🔷வெள்ளி தட்டுகள் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இது உணவில் உள்ள சில சேர்மங்களுடன் தொடர்பு கொள்ளும் உலோகத்தின் திறனின் காரணமாகும்..மேலும், அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது. அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது.

🔷வெள்ளியில் நல்ல வெப்ப கடத்துத்திறன் உள்ளது, இது சூடான உணவுகளின் வெப்பநிலையை குறுகிய காலத்திற்கு பராமரிக்க உதவும்.

வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்