
15 மாணவர்களை சிறுவர் சீர்திருத்த நிலையத்திலும் 3 மாணவர்களை விளக்கமறியலிலும் வைக்க உத்தரவு!
வெல்லவாய – தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சில தரப்பினரால் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, வெளியான தகவலையடுத்தே விசாரணைகள் தீவிரமாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 18 மாணவர்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில பிரதேசத்திலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 வயதான மாணவி, 2023 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் 18 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் நேற்று திங்கட்கிழமை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது 18 வயதுக்கு உட்பட்ட 15 மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
18 வயதுக்கு மேற்பட்ட 3 மாணவர்களையும், பெண்ணையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
