சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி
இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விண்ணமங்கலத்தைச் சேர்ந்த சிவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த லொறி ஹெட்லைட் வெளிச்சத்தில் மரம் கண்ணுக்கு தெரியாததால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததாகவும் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று கூறிய உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
