ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 337 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 337 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 220 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 117 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்