கணவர் இறந்த துக்கத்தில் தவறான முடிவெடுத்த மனைவி
இந்தியாவில் வேதாரண்யம் அருகே கணவர் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் மனைவியும் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறித்து பொலிஸார் விசாரித்துவருகின்றனர்.
குமரேசன், புவேனேஸ்வரி தம்பதியருக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. மளிகை கடை நடத்திவரும் குமரேசன் கடன் சுமையால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலை வீட்டு மாடி அருகே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
சத்தம் கேட்டு மனைவியும், பெற்றோரும் மாடிக்கு ஓடி சென்றபோது, கணவர் இறந்து கிடப்பதை பார்த்து மனைவியும் உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக உயிரிழந்த நபரின் பெற்றோர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
