உயிரை மாய்த்துக் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி!

-திருகோணமலை நிருபர்-

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொள்ளாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (வயது 38) எனவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் மனைவி தமுத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமையாற்றி வருகிறார்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகேவ பகுதியில் உள்ள மனைவியின் தாயாரின் வீட்டில் வைத்தே குறித்த வைத்தியர் தூக்கில் தொங்கி உயிரை மாயத்துக்கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்