
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 51 முறைப்பாடுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 25 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 26 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேவேளை கடந்த ஜூலை 31 திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 320 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
