
ஜனாதிபதி – தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு இடையே சந்திப்பு
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்காகக் குறித்த பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு அரசியல் கட்சிகளினதும், சிவில் அமைப்பினதும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
