தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பிரிட்ஜ்வியு விடுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் பிரிட்ஜ்வியு விடுதியில் “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், மற்றும் தேசிய மக்கள் சக்கிதியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்