
துப்பாக்கிகள் – தோட்டாக்களுடன் சிறைக்காவலர் கைது
ராஜகிரிய பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் சிறைக்காவலர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 350 ரீ-56 ரக தோட்டாக்களும், ஐம்பது 9 மில்லிமீற்றர் ரவைகள் மற்றும் 15.56 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 8 தோட்டாக்களும், 6 கிராம் ஹெரோயின், 700 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 200 மில்லிகிராம் குஷ் ரக போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
