
இனமத நல்லிணக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தி 25 மாவட்டங்களுக்கும் நடைபயணம்
-யாழ் நிருபர்-
இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணத்தினை நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்துள்ளார்.
சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே யாழ். நல்லூர் ஆலயத்தில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார். அத்துடன் மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மரக் கன்றுகளையும் நாட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
