
கரும்புத் தோட்டத்தில் அனிதா இவரை போல் 9 பெண்கள் : திணறும் பொலிஸார்
இந்தியா- உத்தரப்பிரதேசத்தில் 13 மாதங்களில், 9 பெண்கள் தொடர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலைகள் அனைத்தும், மாலை நேரத்தில் மட்டும் நடந்துள்ளது வயல்களில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும்போதே பல பெண்கள் குறிவைக்கப்பட்டதாகவும், பெரும்பாலோனோர் கூலி தொழிலாளிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பரேலி பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
ஒரே மாதிரியான முறையில் இந்த பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எதற்காக இந்த கொடுமை இடம்பெற்றுள்ளது ? இந்த சீரியல் கில்லர் யார் என்று இதுவரை தெரியவரவில்லை.
கடந்தாண்டு ஜுன் மாதம், ஒரு பெண்ணின் சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டது. பெண்ணின் கழுத்து சேலையால் நெரிக்கப்பட்டிருந்தது இது தொடர்பான விசாரணையை பொலிஸார் நடத்தி வந்தனர். இதையடுத்து குறித்த ஜூன் மாதம் அடுத்தடுத்து 2 பெண்களும் கொல்லப்பட்டார்கள்.
மேலும் ஜூலையில் ஒருவரும், ஆகஸ்ட்டில் ஒருவரும், அக்டோபரில் ஒருவரும், நவம்பரில் 2 பெண்களும் என அடுத்தடுத்து பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். அனைவருமே ஒரே மாதிரியான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு ஆடைகள் களைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைவருமே ஒரே மாதிரியான முறையில், கரும்பு தோட்டத்தில் வீசப்பட்டுள்ளனர். அனைவருமே இவர்கள் அணிந்திருந்த புடவையை பயன்படுத்தியே மூச்சுத்திணற வைத்து கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்கள் அவைரும் இளம்பெண்கள் கிடையாது. 40 முதல் 65 வயதுடைய பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர் ஆனால் இவர்களில் எவரும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து 300 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட 14 குழுக்கள், இந்த சம்பவத்திற்கான விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்த ஜூன் மாதம் வரையில், தொடர் கொலைகள் சம்பவம் எதுவுமே நடக்கவில்லை இதனால் உள்ளூர்வாசிகளும், பொலிசாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்தநிலையில் ஜூலை 2ஆம் திகதி, புஜியா ஜாகிர் பகுதியை சேர்ந்த அனிதா என்பவர், தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறார் அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க போன அனிதா வீட்டுக்கு திரும்பவில்லை.
அனிதாவை, அவரது குடும்பத்தினர் தேடிவந்தபோது அதே நாளில் அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக, பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பொலிசார் விரைந்து சென்றபோது, அனிதாவும் சேலையால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு கரும்பு தோட்டத்தில் வீசியிருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் நடத்தப்பட்டது . அப்போது 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள். உடனே அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, குற்றவாளியின் மாதிரி ஓவியம் வரையப்பட்டது. இந்த மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை பொலிசார் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன ஆனால், இந்த கொலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இந்த கொலைகளுக்குப் பின்னணியில் ஒரு சீரியல் கில்லர் இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது இப்போது அனிதா கொலையில் அந்த சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.
எனவே கொலையாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என்று பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீரியல் கில்லர் 13 மாத கால இடைவெளியில் ஒரே வயதுடைய 9 பெண்கள் ஒரே பாணியில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலைகளை எல்லாம் சீரியல் கில்லர் செய்தாரா என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில் உத்தரபிரதேசமே கதிகலங்கி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
