
மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் சூட்டும் வைபவம்
மூதூர் வலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகாவித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னம் சூட்டும் வைபவம் நேற்று முன் தினம் வியாழக்கிழமை பாடசாலையில் திறந்த அரங்கில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
அதிபர் திரு.கணேஷ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலைக்கு உரித்தான சத்தியப்பிரமாண உறுதியுரையோடு பாடசாலையின் உயர் கௌரவத்தினதும் கண்ணியத்தினதும் அடையாளமாக இருக்கும் பாடசாலையின் இலட்சனை இவர்களுக்கு சின்னமாக சூட்டப்பட்டது.
சிரேஷ்ட மாணவர் தலைவர்கள் ஆண் பெண் உதவிச் சிரேஷ்ட தலைவர்கள் ஆண் பெண் உட்பட 27 தலைவர்களுக்கு இவ்வாறு கடமைகள் பொறுப்பளிக்கப்பட்டமை குறிப்படத்தக்கதாகும்.
இதற்காக ஒத்துழைப்புக்கு வழங்கிய அனைவருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
