
திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் சிறு சிகப்பு நிற நண்டுகள் !
-மூதூர் நிருபர்-
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீற்றர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீற்றர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

