
அம்பியூலன்ஸ் வண்டியில் பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் : இராணுவ சிப்பாய் கைது!
அம்பியூலன்ஸ் வண்டியில் பெண் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற குறித்த இராணுவ சிப்பாய் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
