தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
🔶தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு அற்புதமான இனிப்பானதாகும். சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏஜென்ட் என்றும் அறியப்படும் தேன் ஒரு சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அளித்து நம் உடல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
🔶தேனில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ஸானது சிறந்த கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். தேன்பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு சுவையை அதிகரிக்க பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஒரு சில நேரங்களில் ஆரோக்கியமான உணவுகள் இரண்டை சேர்த்து சாப்பிடுவது தேவையற்ற சில எதிர்மறை விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.
🔶அந்த வகையில் நிபுணர்களின் கூற்றுப்படி தேனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நன்மையை விட உடலுக்கு தீங்கு செய்து விட கூடும். தேனை எந்தெந்த பொருளோடு சேர்த்து சாப்பிட கூடாது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தேன் மற்றும் வெள்ளரி
📍பலரும் குளிர்ச்சி தரும் மற்றும் நீர்சத்து மிக்க வெள்ளரியில் இனிப்பான தேன் கலந்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் நிபுணர்கள் வெள்ளரிக்காயுடன் தேனை சேர்ந்து பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கின்றனர். ஏனெனில் வெள்ளரியின் குளிர்ச்சி மற்றும் டையூரிடிக் பண்புகள் இனிப்பான தேனுடன் இணைவது சரும அல்லது செரிமான பிரச்சனைகளைத் தூண்ட கூடும்.
தேன் மற்றும் பூண்டு
📍பூண்டு மற்றும் தேன் இரண்டுமே ஆன்டி-வைரல் ஏஜென்ட்ஸ் ஆகும், எனவே குறிப்பாக மழைக்காலத்தில்.இவை நமக்கு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன. ஆனாலும் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவதற்கு எதிராக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த காம்பினேஷன் சிலருக்கு செரிமான ஆரோக்கியத்தில் சிக்கல் அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளை மோசமாக்கக் கூடும்.
தேன் மற்றும் நெய்
📍தேன் மற்றும் நெய் இரண்டையும் சேர்ப்பது மிகவும் ஆபத்தான கலவையாகும். விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, எலிகளுக்கு தேனும் நெய்யும் கலந்து சம விகிதத்தில் கொடுக்கப்பட்டன. ஆனால் இதன் காரணமாக அவை முடி உதிர்தல், எடை இழப்பு மற்றும் காதுகளில் சிவப்பு திட்டுகள் உள்ளிட்ட சில தீவிர பக்க விளைவுகளை சந்தித்தன.
தேன் மற்றும் சூடான நீர்
📍பலரும் எடையை குறைக்க முதலில் கையில் எடுக்கும் ஆயுதமாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும் முறை தான் இருக்கிறது. ஆனால் வெந்நீருடன் தேன் கலந்து பருகுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். அவற்றுள் சில…தேனை சூடு நீரில் கலப்பது தேனில் உள்ள நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிய காரணமாகிறது. ஆய்வின்படி 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தேனின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு பாதிக்கப்பட்டு அது மிகவும் நச்சுத்தன்மையுடையதாக (toxic) மாறும்.
தேன் மற்றும் மீன்
📍அசைவ உணவுகளுடன் குறிப்பாக வெள்ளை மீன் மற்றும் சிவப்பு இறைச்சியுடன் தேனை சேர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இறைச்சி வகைகள் அல்லது மீன் சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மற்றும் சாப்பிட்டு முடித்த 1 மணி நேரத்திற்குள்ளும் தேனை எடுத்து கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் இது வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உட்பட. சில செரிமான பிரச்சனைகளை தூண்ட கூடும் என்கிறார்கள். ஒருவேளை மீன் சாப்பிட்ட பிறகு தேன் எடுத்து கொள்ள நேர்ந்தால் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும். அதே போல அசைவ உணவை சமைப்பதற்கு தேனை பயன்படுத்தினால் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்தவும்.
தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்