வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்: தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார்
இந்தியாவில் புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சாலையில் முழங்கால் அளவு ஓடிய வெள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் இழுத்துச்சென்ற தனது மோட்டார் சைக்கிளைப் பிடிக்க முயன்றபோது குறித்த நபரும் அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
