மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி கொலை

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில்இ குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது போத்தலினால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முசுண்டப்பட்டியில் செயல்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்றும் நிலையத்தின் காவலாளியான தங்கராஜ் இரவு பணிக்குச் சென்ற போது அங்கு அமர்ந்து சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த குறித்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் மது போத்தலை உடைத்து அவரது கழுத்தில் குத்தி கொலை செய்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்