40 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்கு தங்கம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்துத் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீற்றர் தூரம் ஈட்டியெறிந்து முந்தைய ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்த அவர், முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கினார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையையும் அர்ஷத் நதீம் பெற்றார்.

1984 ஆம் ஆண்டிற்குப் பின் தற்போது பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் பாகிஸ்தான் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்