ஹரின், மனுஷவின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள்?

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது.

இந்நிலையில், காலி மாவட்டத்திலிருந்து பந்துலால் பண்டாரிகொட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை ஹரின் பெர்னாண்டோவின் தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்