11 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகளை நாளை சனிக்கிழமை முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹர நாளைய தினம் முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி நகர எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்