கணவன் – மனைவி தகராறு: மனைவி கொலை

இந்தியாவில் கர்நாடகாவில் திருமணம் முடித்த நான்கு மணி நேரத்தில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருந்த பகுதியிலேயே லிகிதா ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்றைய முன்தினம் புதன்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமணம் முடிந்தவுடன், புதுமணத்தம்பதிகள் தனியாக ஒரு அறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாற, இருவரும், ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, ரத்த காயத்தால் சுருண்டு விழுந்த இருவரையும், உறவினர்கள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது வழியிலேயே மனைவி உயிரிழந்தார். கணவர் கோலார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் செய்த அதே நாளில் கணவன் – மனைவி தக்கிக்கொண்டு, காதல் மனைவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்