
லொறியுடன் மோதிய காட்டு யானை சம்பவ இடத்திலேயே பலி
-மூதூர் நிருபர்-
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை மோதியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த பெண் விலங்கு எனவும், கந்தளாய் லஹபத்த பகுதிக்கு சென்று திரும்பும் போது வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் காரியாலயத்தின் பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஏ.பி.கே.நந்தசேன தெரிவித்தார்.
திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய லொறி அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அலுவலகம் மற்றும் அக்போபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

