வாகன விபத்து: இருவர் படுகாயம்
இந்தியாவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற கண்ட்டெய்னர் லொறி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நொறுங்கிய காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
