மேற்கு வங்க முன்னாள் முதல்வர் காலமானார்

இந்தியாவில்  மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி முன்னணி ஆட்சியின் போது, பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி சி.பி.எம் முதலமைச்சராக இருந்தார்.

இவர் தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்