முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மரண தண்டனை உறுதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் இன்று வியாழக்கிழமை மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட பரிசீலனைக்கு பிறகு, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்கியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி பொலிஸ்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்