கார் விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் சென்னை, மெரினா பகுதியில் ராணி மேரி கல்லூரி அருகே சாலையின் நடுவே அமர்ந்திருந்த ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

கார் டாக்ஸி சாரதியான வீரமணி என்பவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை முட்டுக்காட்டில் இருந்து 4 பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடுரோட்டில் ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கார் சாரதி கவனிக்காத நிலையில், கார் மோதியதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் கார் சாரதியை கைது செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து பொலிஸார், விபத்தில் இறந்தவர் யார், எதனால் அவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.