
ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைது
-பதுளை நிருபர்-
பண்டாரவளை நகரில் ஹொரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 4700 மில்லி கிராம் ஹொரோயின் மீட்கப்பட்டுள்ளது.
தியத்தலாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், மற்றைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
